சஹ்ரான் குழுவை உயிர்ப்பிக்க திட்டமா?: கத்தான்குடியில் வீட்டிலிருந்து 30 பேர் கைது!

Date:

காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரே சந்தேகத்தின் பேரில் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் நேற்று (29) இரவு இவர்கள் கூடியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த சஹ்ரான் ஹசீமின் சாகோதரியின் கணவர் மற்றும் காத்தான்குடியில் 2017-3-10 திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த சஹ்ரானின் குழுவைச் சேர்ந்த 3 பேர் உட்பட 30 பேர் ஒன்று கூடிய நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் சஹ்ரானின் கொள்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒன்று கூடினார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று...

தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்!

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது...

அர்ச்சுனாவின் உளறு வாய்க்கு பெரும் ஆப்பு: நிகழ்நிலை காப்பு சட்டத்தில் வழக்கு!

தெல்லிப்பளை வைத்தியசாலை புற்றுநோய் பிரிவு வைத்தியர் ஒருவருக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்