27.1 C
Jaffna
February 4, 2025
Pagetamil
விளையாட்டு

‘நீங்கள் வேறு வேலையை தேடுவது நல்லது’: நடுவரை விமர்சித்த ஹசரங்க!

தம்புள்ளையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ரி 20 போட்டியின் பரபரப்பான இறுதி ஓவரில் ஆப்கான் வீரர் வீசிய இடுப்புயரத்துக்கும் அதிகமான ஃபுல் டோஸை சட்டப்பூர்வ பந்து வீச்சாகக் கருதியதை அடுத்து, கள நடுவர் லிண்டன் ஹன்னிபோல் வேறு வேலையை பார்ப்பது நல்லது என இலங்கையின் ரி 20 கப்டன் வனிந்து ஹசரங்க நேரடியாக விமர்சித்தார்.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்களை குவித்தது. பதிலளித்த ஆடிய இலங்கை, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து, 206 ஓட்டங்களை பெற்று, 3 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

போட்டியின் இறுதி ஓவரில் கமிந்து மெண்டிஸ் துடுப்பெடுத்தாடினார். வஃபாதர் வீசிய முதல் பந்து பவுண்டரி. 2வது பந்தில் ஓட்டமில்லை. 3வது பந்து பவுண்டரி. கடைசி 3 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி.

4வது பந்தை வஃபாதர் ஃபுல் டோஸாக வீசினார். அது கிட்டத்தட்ட துடுப்பாட்ட வீரரின் நெஞ்சுக்கு நேராக சென்றது. ஆனாலும், நடுவர்கள் எந்த ரியாக்சனும் இல்லாமல் நின்றனர். நடுவர்கள் அந்த பந்தையும் கணக்கில் சேர்ப்பதை உணர்ந்ததும், கமிந்து நோ-போல் கேட்டு, மறுபரிசீலனையும் கோரினார். இருப்பினும், தற்போதைய ஐசிசி விளையாடும் நிலைமைகள், அவுட் கொடுக்காத நடுவர் முடிவுகளுக்கான வீரர் மதிப்பாய்வுகளை அனுமதிக்காது. உண்மையில், நோ-போல்களில் ஆட்டமிழக்கப்படும் வரை, நடுவர்களே மூன்றாம் நடுவர் மதிப்பாய்வுகளைத் தொடங்க முடியாது.

இதனால் இரண்டு பந்துகளில் 11 ஓட்டங்கள் தேவையென நிலைமை மாறியது. 5வது பந்து வைட். அடுத்த பந்தில் ஓட்டமில்லை. 6வது பந்து சிக்சர். இலங்கை 3 ஓட்டங்களால் தோல்வி.

ஆட்டம் முடிந்ததும் களத்துக்கு வந்த அணித்தலைவர் வனிந்து ஹசரங்க, நடுவர்களுடன் கோபமாக தகராற்றில் ஈடுபட்டார். அவரை பினுர பெர்னாண்டோ சமரசப்படுத்தி அழைத்துச் சென்றார்.

போட்டியின் பின்னர் ஊடகவியலாளரகளிடம் பேசிய ஹசரங்க-

“சர்வதேச போட்டியில் இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது. “அது [இடுப்பு உயரத்திற்கு] அருகில் இருந்திருந்தால், அது ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் ஒரு பந்து மிகவும் உயரமாக செல்கிறது… அது சற்று மேலே சென்றிருந்தால் அது பேட்ஸ்மேனின் தலையில் பட்டிருக்கும்.

அதை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால், அந்த நடுவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஏற்றவர் அல்ல. அவர் வேறு வேலை செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.”

“அந்த முடிவுகளை நீங்கள் முன்னர் மறுபரிசீலனை செய்யக்கூடிய சூழ்நிலை இருந்தது, ஆனால் ஐசிசி அதிலிருந்து விடுபட்டுள்ளது. எங்கள் பேட்ஸ்மேன்கள் அதை மறுபரிசீலனை செய்ய முயன்றனர். மூன்றாவது நடுவர் இந்த வகையான நோ-போலையும் சரிபார்க்க வேண்டும். அவர்களால் முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. அவர்கள் செய்யவில்லை. அப்படியிருந்தும், அந்த நேரத்தில் கள நடுவரின் மனதில் என்ன நடந்துகொண்டிருந்தது என்று எனக்குத் தெரியவில்லை.” என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

என் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை!

Pagetamil

`இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்’; யார் இந்த பிரியா சரோஜ்?

Pagetamil

‘உங்களை விட என் மகன் சிறந்த வீரர்’ – கபில் தேவுக்கு ‘பேப்பர் கட்டிங்’ அனுப்பிய யோக்ராஜ் சிங்

Pagetamil

Leave a Comment