24.8 C
Jaffna
January 26, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி எச்சங்கள் 1994- 1996 காலத்துக்குரியவை: தமிழ்பக்கத்தின் தகவல் நீதிமன்றத்தில் உறுதியானது!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி மீட்கப்பட்ட எச்சங்கள் 1994 ஆண்டு தொடக்கம் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியவை என தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான வழக்கு இன்று (22) ) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, பேராசிரியர் ராஜ்சோமதேவ சமர்ப்பித்த அறிக்கையின் விபரம் வெளியானது.

ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட எச்சங்களில் இருந்தும், பிறிதாக எடுக்கப்பட்ட அனைத்து பிற பொருட்கள் தொடர்பான பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கை இன்று மன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் த.பிரதீபனால் மன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பகுப்பாய்வின் அடிப்படையில் இது 1994 ஆம் ஆண்டுக்கு முற்படாததும் 1996 ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியினை கொண்டிருக்கலாம் என பல பக்க அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு இடைக்கால அறிக்கையாகும்.

அத்தோடு மீண்டும் எஞ்சிய எலும்புக்கூட்டு தொகுதியினை அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அனேகமாக மார்ச் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.

இருப்பினும் அதற்கான நிதி, அமைச்சினால் வழங்கப்படும் பட்சத்தில் அகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே மீண்டும் மார்ச் மாதம் 4 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வைத்தியர்களின் அறிக்கையின் மனித எச்சங்களின் வயது, பால், இறப்பிற்கான காரணம் போன்றவை இன்னும் வராமல் நிலுவையில் இருக்கின்றது.

இந்த மனித எச்சங்கள் 1995ஆம் ஆண்டு கொக்குத்தொடுவாய் 5 முகாம் மீதான தாக்குதலில் உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுடையது என்பதை தமிழ் பக்கம் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதமே- கடந்த கால சம்பவங்களின் அடிப்படையில் வெளிப்படுத்தியிருந்தது. | அந்த கட்டுரையை முழுமையாக படிக்க- கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டது யார்?: 1995 இல் நடந்தது என்ன?; சில சம்பவங்களும், வாய்ப்புக்களும்! | தமிழ் பக்கம் அப்பொழுது வெளியிட்ட தகவல் உண்மையானது என்பதை இன்றைய நீதிமன்ற அறிக்கை உறுதி செய்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

Leave a Comment