மத்திய மலைநாட்டில் சுமார் ஒரு மாத காலமாக கடும் வறட்சியான காலநிலை நிலவி வருவதால், மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவடைந்து வருகின்றது.
இன்று (19) காலை 6.00 மணி நிலவரப்படி, மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் முறையே 13 அடி 5 அங்குலம் மற்றும் 8 அடியாக காணப்படுவதாக அந்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
தேசிய நீர்மின்சார அமைப்புக்கு சொந்தமான லக்ஷபான நீர்மின்சார அமைப்பின் கீழ் உள்ள லக்ஷபான, நியூ லக்ஷபான, கனியன், பொல்பிட்டிய, விமலசுரேந்திர மற்றும் ப்ரோட்லேண்ட் ஆகிய 6 மின் உற்பத்தி நிலையங்களுக்கு, மவுஸ்சாகலை மற்றும் காசல்ரீ ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் விநியோகிக்கப்படுகிறது.




