கெஹலியவை ஆராய வைத்தியர் குழு!

Date:

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் உடல்நிலையை கண்காணிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு மாளிகாகநாட நீதவான் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றில் ஆஜராக முடியாத வகையில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் சுகயீனமடைந்துள்ளதாக கூறப்படுவது தொடர்பில்உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.

இந்த மனுவை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

அதன்படி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் உடல்நிலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற ‘இம்யூனோகுளோபின்’ எதிர்ப்பு மருந்துகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்ததன் மூலம் பல மில்லியன் ரூபா மோசடி செய்து நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் 15ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகவிருந்த நிலையில், நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியாத அளவுக்கு அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியரின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

spot_imgspot_img

More like this
Related

மதியம் 1 மணிக்குப் பிறகு உஷார்! பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட திடீர் வானிலை எச்சரிக்கை!

இலங்கையின் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று...

பிரபாகரனுக்கு வாழ்த்து சொன்னவருக்கு சபையில் இடமில்லை! ரவிகரன் எம்.பி.க்கு எதிராக நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களும் மாவீரர்...

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்