27.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

மனைவியுடன் சண்டையிட்டு கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த கணவன்

வவுனியா, வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் நேற்று (16) காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார்.

இதனையடுத்து, மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை அழைத்து மீட்க முயற்சித்தனர். இதன்போது கிராம அலுவலர் மற்றும் பொலிசாருக்கும் அயலவர்கள் முறைப்பாடு செய்தனர்.

அப் பகுதி மக்களின் துணையுடன் அவர் மீட்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் பொலிசாரால் ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய செபமாலை மொரிசன் என்பவரே மரணமடைந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டையில் நூதன கொள்ளை

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணு லான்ஸ் கோப்ரல் பலி

east tamil

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

east tamil

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

east tamil

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

Leave a Comment