26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

பாடசாலையில் போதையில் மிதந்த தரம் 5 மாணவர்கள் 4 பேர் வைத்தியசாலையில்!

குருநாகல் – மதுராகொட பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5 இல் கல்வி கற்கும் 4 மாணவர்கள் போதைப்பொருளை உட்கொண்டதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் ஒருவன் தனது தந்தை மறைத்து வைத்திருந்த மாத்திரையை பாடசாலைக்கு எடுத்துச் சென்று ஏனைய 3 மாணவர்களுடன் சேர்த்து அருந்தியதாகவும், இதனால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலைக்கு மாத்திரைகளை எடுத்துச் சென்ற மாணவனின் தந்தை ஹெரோயின் போதைக்கு அடிமையானவர் எனவும் அவர் மீது போதைப்பொருள் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவர்களில் ஒருவர் அதிகளவில் குடிபோதையில் இருந்ததாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் லிஹினிவெஹர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

நேற்று பாடசாலை நேரத்தில் குடிபோதையில் மரத்தடியில் விழுந்து கிடந்த மாணவர்கள் ரம்பதகல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரம்பதகல்ல வைத்தியசாலையின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

அரச வேலைவாய்ப்புகள் என்ற போர்வையில் தகவல் திருட்டு

east tamil

இன்று முதல் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு

east tamil

இலங்கையில் விரைவில் சூரிய மின்னுற்பத்தி

east tamil

கம்மன்பிலவின் கவலைகளின் பின்னணி என்ன?

Pagetamil

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

Leave a Comment