24.8 C
Jaffna
January 26, 2025
Pagetamil
இந்தியா

முதலிரவில் அளவுக்கு அதிகமாக வயக்கரா மாத்திரை உட்கொண்டு விட்டு பாய்ந்த மணமகன்: மணமகள் பலி!

முதலிரவில் மணமகன் வயக்கரா மாத்திரை சாப்பிட்டு விட்டு மூர்க்கத்தனமாக நடந்ததால் மனைவி உயிரிழந்துள்ளார்.

முதலிரவின்போது நீண்ட நேரம் உல்லாசமாக இருப்பதற்காக மணமகன் வயக்கரா மாத்திரைகளை சாப்பிட்டு உடலுறவு வைத்துள்ளார். முதலிரவில் அவர் மிருகத்தனமாக நடந்து கொண்ட நிலையில், படுகாயம் அடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள ஹாமிர்பூரில் கடந்த 3ஆம் திகதி ஒரு தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது. முதலிரவில் நீண்ட நேரம் உறவு கொள்ள வேண்டும் என்று கருதிய மணமகன் அதற்காக வயக்கரா மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டுள்ளார்.

மாத்திரைகள் உதவியுடன் மணமகன் மிருகத்தனமாக உடலுறவு வைத்த நிலையில், மணமகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த மணமகளின் உறவினர்கள், அவரை மருத்துவமனையில் கடந்த 7 ஆம் திகதி அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 10 ஆம் திகதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபரத்தை அறிந்த மணமகன் தலைமறைவாகியுள்ளார். மணமகளின் பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு சகோதரர் உள்ளார்.

தங்கையின் கணவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் காவல்துறையில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் ஹாமிர்பூர் காவல் நிலையம் அத்தகைய புகாரைப் பெறவில்லை என்று தெரிவித்துள்ளது. “கோட்வாலி நகர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக எந்தத் தகவலும்/புகாரும் பெறப்படவில்லை. புகாரைப் பெற்றதும், உரிய விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பெயரில் பலகோடி மோசடி

east tamil

மஹா கும்பமேளாவில் மீண்டும் தீ

east tamil

துறவறத்துக்கு மாறிய நடிகை

Pagetamil

கட்சி தொடங்கியதுமே சிலர் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர்: விஜய் பற்றி முதல்வர் ஸ்டாலின் மறைமுக விமர்சனம்

Pagetamil

மகாராஷ்டிராவில் ரயில் விபத்து: 12 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்

east tamil

Leave a Comment