மனைவியை சுத்தியலால் அடித்து கொன்ற கணவன் இன்று (16) கைது செய்யப்பட்டதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மிஹிந்தலை, இஹலகம, கலேதிரப்பனை என்ற முகவரியில் வசிக்கும் ஆர்.நிமேஷா மதுஷானி (23) என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக பெண்ணின் தலையில் கணவர் சுத்தியலால் தாக்கியுள்ளார். பின்னர் மனைவியை படுக்க வைத்து விட்டு, அவரும் படுத்து விட்டார்.
பின்னர், அதிகாலையில் அந்த பெண் உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.
பெண்ணின் மரணம் தொடர்பில் அவரது 32 வயது கணவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.



