பாடசாலை மாணவியை வன்புணர்ந்த ஆசிரியருக்கு 17 வருட சிறைத்தண்டனை!

Date:

பாடசாலை மாணவியொருவரை பாலியல்‌ வன்கொடுமைக்கு உட்படுத்திய
கொட்டகலை பகுதியைச்‌ சேர்ந்த 43 வயது ஆசிரியரான எம்‌.வைத்தியநாதன்‌ என்பவருக்கு நுவரெலியா மேல்‌ நீதிமன்றத்தால்‌ இன்று, 17 வருடங்கள்‌ கடூழிய
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மேல்‌ நீதிமன்ற நீதிபதி விராஜ்‌ வீரசூரியவால்‌ மேற்படி தீர்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.

கொட்டகலை பகுதியை சேர்ந்த 43 வயதுடைய பாடசாலை ஆசிரியர்‌, பாடசாலை மாணவி ஒருவரை மூன்று தடவைகள்‌ பாலியல்‌ துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்‌ என முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அவர்‌ கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக நுவரெலியா மேல்‌ நீதிமன்றத்தில்‌ கடந்த 2019 ஆம்‌ ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது.

கடந்த ஐந்து வருடங்களாக வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில்‌, நீதி
மன்றத்திற்கு அளிக்கப்பட்ட சாட்சியங்களின்‌ அடிப்படையில்‌ இவர்‌ குற்றவாளியாக
நிரூபிக்கப்பட்டு மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன்‌ குறித்த ஆசிரியர்‌ மீது சுமத்தப்பட்டிருந்த மூன்று குற்றச்சாட்டுகளில்‌ முதல்‌
குற்றச்சாட்டில்‌ இருந்து அவர்‌ விடுவிக்கப்பட்டுள்ளார்‌. ஏனைய குற்றச்சாட்டுகள்‌
நிரூபிக்கப்பட்டு – குற்றவாளியாக கருதப்பட்ட ஆசிரியருக்கு 17 வருட சிறை
தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதவான்‌ விராஜ்‌ வீரசூரிய, பாதிக்கப்பட்ட மாணவிக்கு
ஐந்து இலட்சம்‌ ரூபா நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும்‌, இதை செலுத்தாவிட்டால்‌ மேலும்‌ மூன்றரை வருடங்கள்‌ சிறை தண்டனை அனுபவிக்கவேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் நாளை (30.11.2026) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு மத்தியிலும், பொதுமக்களுக்கான...

முடிவுக்கு வரவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் : அமைச்சர் அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு...

1983 கறுப்பு ஜூலை வன்முறைகள் தொடர்பில் விரிவான ஆய்வு – விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமனம்!

1983 ஜூலை மாதத்தில் இலங்கை முழுவதும் பரவிய கறுப்பு ஜூலை வன்முறைகள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்