சிறுமியை சீரழித்த ஆட்டோ சாரதிக்கு 10 வருட சிறை!

Date:

தனது உறவுக்கார சிறுமியொருவரை பாலியல்‌ வன்கொடுமைக்கு உட்படுத்திய 35
வயது நபருக்கு நுவரெலியா மேல்‌ நீதிமன்றத்தால்‌ 10 வருடங்கள்‌ கடூழிய சிறை
தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மேல்‌ நீதிமன்ற நீதிபதி விராஜ்‌ வீரசூரியவால்‌ நேற்று இத்தீர்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவியான சிறுமியை துஷ்பிரயோகம்‌ செய்த குற்றச்சாட்டில்‌, ஆட்டோ
சாரதியான குறித்த சந்தேக நபர்‌ கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக 2013 இல்‌
வழக்கு தாக்கல்‌ செய்யப்பட்டது. அவர்‌ குற்றவாளியென நிரூபிக்கப்பட்டதையடுத்தே
மேற்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன்‌, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 இலட்சம்‌ ரூபா நஷ்டஈடு வழங்குமாறும்‌,
நீதிமன்றுக்கு 25 ஆயிரம்‌ ரூபா அபராதம்‌ செலுத்துமாறும்‌ உத்தரவிடப்பட்டுள்ளது.
இவைகளை செலுத்தாத பட்சத்தில்‌ மேலும்‌ 06 மாதகால சிறை தண்டனை
அனுபவிக்க நேரிடும்‌.

வலப்பனை பகுதியை சேர்ந்த சிசுபாலன்‌ புஸ்பராஜ்‌ (35) என்ற ஆட்டோ சாரதிக்கே
தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘ஹிஜாப் அணியாமல் இசைக் கச்சேரி’ – ஈரானிய பாடகிக்கு 74 கசையடி

ஈரானிய பாடகிக்கும், அவரது இசைக் குழுவைச் சேர்ந்த 4 பேருக்கும், தலா...

தங்கச்சங்கிலியுடன் மாயமான யுவதி

இத்தாலியில் பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, குறுகிய கால விடுமுறைக்காக நாடு திரும்பிய...

அம்பாறையில் இரு வேறு கோர விபத்துக்கள்- சகோதரர்களில் ஒருவர் பலி

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் நிந்தவூர் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்