மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் சட்டவிரோத மின்சார இணைப்பில் சிக்கிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொப்பிகல ஈச்சயடி பிரதேசத்தில் நடத்தப்படும் பண்ணையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
யானைக்கு பொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கியே இருவரும் உயிரிழந்துள்ளனர். யானை வேலியில் குறைந்த அழுத்த மின்சாரமே பாய்ச்சப்படும் நிலையில், இங்கு தேசிய மின் கட்டமைப்பிலிருந்து மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பண்ணை கருண அம்மான் எனப்பட்ட விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு சொந்தமானது என குறிப்பிடப்பட்டது. இதே பண்ணையில் கடந்த வருடமளவிலும் சட்டவிரேத மின் இணைப்பில் சிக்கி ஒருவர் உயிரிழந்திருந்தார்.
தற்போது இந்த பண்ணையை கருணா அம்மானின் நெருங்கிய உறவினர் ஒருவர் குத்தகைக்கு நடத்துவதாக, தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய விபத்தில் புலிபாய்ந்த கல், கிரானை சேர்ந்த ஆறுமுகம் யோகநாதன் ( 51), கிரானை சேர்ந்த விநாயகமூர்த்தி சுதர்சன், (21) ஆகிய பண்ணை தொழிலாளர்களே உயிரிழந்துள்ளனர்.