26.7 C
Jaffna
January 20, 2025
Pagetamil
மலையகம்

ஹட்டனில் சிறுமியை சீரழித்து விட்டு 10 வருடம் தலைமறைவாக பட்டாணி விற்றவர் கைது!

நீதிமன்றத்தை தவிர்த்து 10 வருடங்களாக தலைமறைவாக இருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவர் மாவனெல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவி ஒருவரை பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் ஆஜராகாமல் நீதிமன்றத்தை தவிர்த்திருந்தார்.

நோர்டன்பிரிட்ஜ் பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாம் வாழ்ந்த தோட்டத்தில் 11 வயது பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் நோர்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் தேடப்பட்டார்.

ஆனால் அப்போது சந்தேகநபர் அப்பகுதியை விட்டு ஓடி சென்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக இருந்து பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மாவனெல்ல பிரதேசத்தில் மாறுவேடத்தில் பட்டாணி விற்பனை செய்வதாக நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு ம் தகவல் கிடைத்துள்ளது.

சந்தேகநபர் மாவனெல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகிழுந்து-பேருந்து விபத்து

east tamil

மவுஸ்ஸாக்கலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து

Pagetamil

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

east tamil

விபத்தில் இரு மாணவர்கள் பலி

east tamil

4 வயது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த தாய்

Pagetamil

Leave a Comment