இலங்கை சுதந்திரதினத்தை தமிழ் மக்கள் கரிநாளாக பிரகடனப்படுத்தி போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், கிளிநொச்சியில் நடந்த போராட்டத்தின் மீது பொலிசார் பலப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இரணைமடுவில் இருந்து பேரணி கிளிநொச்சி நகரை நோக்கி சென்றபோது பொலிசார் வீதித்தடை ஏற்படுத்தி பேரணியை வழிமறித்தனர்.
போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி நடத்தி, இரண்டு மாணவர்களை கைது செய்து இழுத்து சென்று வாகனத்தில் ஏற்றினர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடந்தது.
கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஏனைய மாணவர்கள் வீதிமறியலில் ஈடுபட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1