27 C
Jaffna
January 11, 2025
Pagetamil
இலங்கை

ஐதேகவின் தேர்தல் நடவடிக்கை குழு தலைவர் நியமனம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் நடவடிக்கைக் குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேராவை நியமிக்க கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஏனைய கட்சிகளுடன் ஒருங்கிணைத்து செயற்படுவது இந்தக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள பிரதான கடமைகளில் ஒன்றாகும். இது தவிர கட்சியின் பிரசார பொறிமுறையும் இந்தக் குழுவின் ஊடாக மேற்கொள்ளப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழிநடத்தல் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட முகாமையாளர் லசந்த குணவர்தன, சிறிகொத்த நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷமல் செனரத், செயற்குழு உறுப்பினர் கிரிஷான் தியோடர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவுடன் இணைந்து செயற்படுவதற்கு மேலும் பல குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்வதற்கான திட்டத்தை வழங்குமாறு  ஜனாதிபதி இந்த குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது

east tamil

புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கை தூதர்கள் – பிரதமர் சந்திப்பு

east tamil

கலென்பிந்துனுவெவ புதிய திவுல்வெவ நீர்த்தேக்கத்தில் மீண்டும் நீர்க்கசிவு

east tamil

உணவு விஷமானதால் டிக்கோயாவில் 13 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

கொழும்பு-பசறை பேருந்து விபத்து – 13 பேர் காயம்

east tamil

Leave a Comment