31.9 C
Jaffna
April 28, 2024
விளையாட்டு

198 ஓட்டங்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்: இலங்கை 80/0

இன்று (02) ஆரம்பமான இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடையும் போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களை பெற்றிருந்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் நிஷான் மதுஷ்க 36 ஓட்டங்களுடனும், திமுத் கருணாரத்ன 42 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக, இலங்கை பந்துவீச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் அணியை 198 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர்.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ  51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அசித பெர்னாண்டோ, பிரபாத் ஜயசூரிய தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

ஆப்கானிஸ்தானின் ரஹ்மத் ஷா 139 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை கப்டன் தனஞ்சய டி சில்வா, ஆப்கானிஸ்தானை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.

24 வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளரான சாமிக்க குணசேகர, இலங்கை அணியில் இன்று டெஸ்ட் அறிமுகத்தை பெற்றதுடன், இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 165வது வீரராக சாமிக்க குணசேகர ஆனார்.

நாளை (03) போட்டியின் இரண்டாம் நாள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை வீரருக்கு மரண அடி: மும்பையை வீழ்த்தியது டெல்லி!

Pagetamil

ரி20 உலகக்கிண்ண தொடர் விளம்பரத்தூதர் உசைன் போல்ட்

Pagetamil

மகளிர் ஒருநாள் போட்டி துடுப்பாட்ட தரவரிசையில் சாமரி அத்தப்பத்து முதலிடம்!

Pagetamil

மகளிர் கிரிக்கெட்டில் 300+ ஓட்டங்களை விரட்டியடித்த முதல் அணியானது இலங்கை!

Pagetamil

‘எனக்கு பதில் வேறு வீரரை செலக்ட் பண்ணுங்க’ – டுபிளெசியிடம் மேக்ஸ்வெல் வெளிப்படை!

Pagetamil

Leave a Comment