திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு

Date:

சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் 8 இலட்சம் ரூபாவிற்க்கும் மேல் பெறுமதி வாய்ந்த Bajaj pulsar Ns 200 வகையான மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் 14ம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) மீட்டதுடன் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்