மாலைதீவுகள் நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் கட்டிப்புரண்டு மோதல் (video)

Date:

மாலைதீவுகளின் நடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டிப்புரண்டு  மோதலில் ஈடுபட்ட வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

மாலைதீவில் அண்மையில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், சீன ஆதரவுடைய மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) கட்சியின் மொஹமட் முய்சு வெற்றிபெற்று, ஜனாதிபதியாகியுள்ளார்.

எனினும், அந்த நாட்டு நாடாளுமன்றத்தை தற்போது, இந்திய ஆதரவு நிலைப்பாடுடைய முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் முகமது சோலியின் மாலைதீவுகள் ஜனநாயகக் கட்சி (எம்டிபி)  கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது. ஆளும் தரப்புக்கு பாராளுமன்ற பெரும்பான்மை இல்லை.

ஜனாதிபதி மொஹமட் முய்ஸுவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக விசேட அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

22 பெயர்களில், பெயரிடப்பட்ட 18 பேர் கபினட் அமைச்சர்களாகத் தொடர நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற முடிந்தது, நான்கு பெயர்கள் அங்கீகரிக்கப்படவில்லை. இதையடுத்து,  நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை நிறுத்தி, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, எம்.பிக்கள் கட்டிப்புரண்டும் சண்டையிட்டனர். இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் தெற்கு கரையில் ஈரான் போர்க்கப்பல் மீது நீர்மூழ்கி கப்பல் தாக்குதல்?… 100 பேர் வரை மாயம்!

இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஈரானிய கப்பல் மீது சந்தேகிக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்...

திருமணத்திற்கு புறம்பான உறவால் விபரீதம்… தாதியின் உயிர் பறிபோனது!

அரநாயக்க பிராந்திய மருத்துவமனையில் பணிபுரியும் தாதியின் மரணம், மழுங்கிய கருவியால் மார்பில்...

ஈரானின் ஏவுகணை ஏவும் திறன் இல்லாமல் போகிறது!

செவ்வாயன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் இராணுவத் திறன்கள் படிப்படியாகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்