Pagetamil
முக்கியச் செய்திகள்

தமிழ் அரசு கட்சி பொதுக்குழு கூட்ட குழப்பம்: குகதாசன் குழுவினரால் தாக்கப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய, பொதுக்குழு கூட்டங்களின் போது, இரா.சம்பந்தனின் ஆதரவாளரான ஒருவரை தாக்கிய குகதாசன் ஆதரவாளர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படும் என கட்சித் தலைமை அறிவித்தள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் பற்றி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தாக்கப்பட்டவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

சி.சிறிதரன்- எம்.ஏ.சுமந்திரன் தலைமை போட்டியினால் பிளவடைந்துள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின், மத்திய மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நேற்று நடைபெற்றது.

இதன்போது, செயலாளர் பதவியை கைப்பற்றுவதில் எம்.ஏ.சுமந்திரன் அணி குறியாக இருக்க, குழப்பம் ஏற்பட்டது. புதிய செயலாளர் பதவிக்காக இரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் என கட்சித் தலைவர் மாவை சேனதிராசா அறிவித்த போது, அதற்கு மாறாக மத்தியகுழு தீர்மானமான செயலாளராக குகதாசனை நியமிப்பதை ஆதரிக்கிறீர்களா என சுமந்திரன் கேட்டு, அதை ஆதரிப்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்றார்.

இதற்கு ஆதரவாக 112 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதன்போது, கூட்ட ஏற்பாட்டுக்காக குகதாசன் அழைத்து வந்த தொண்டர்கள், வாகன சாரதிகள் உள்ளிட்டவர்களும் கையை உயர்த்தியதாக மற்றைய தரப்பினர் குற்றம்சுமத்தினர். சிலர் இரண்டு கைகளையும் உயர்த்தியதாக கூறப்பட்டது.

இந்த தீர்மானத்தை 104 பேர் எதிர்த்தனர்.

முன்னதாக மத்தியகுழு கூட்டத்தின் போது, செயலாளராக மட்டக்களப்பை சேர்ந்த சிறிநேசனை நியமிக்க பிரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, செயலாளர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக குகதாசன் தெரிவித்தார். செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக எம்.ஏ.சுமந்திரனும் தெரிவித்தார்.| விரிவான செய்திக்கு: செயலாளர் பதவிக்கு களமிறங்கிய சுமந்திரன்…. கட்சியை விட்டு வெளியேறுவதென்றால் வெளியேறுங்கள்- சுமந்திரன் அணியை நேரில் எச்சரித்த சிறிதரன்: தமிழ் அரசு கட்சியின் இன்றைய குழப்பத்தின் முழுமையான விபரம்!

மத்தியகுழுவில் புதிய நிர்வாகிகள் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டு, அதை தற்போதைய தலைவர் மாவை சேனாதிராசா, பொதுக்குழுவில் வாசித்தார்.

செயலாளராக குகதாசனை நியமிப்பதாக அவர் வாசித்த போது, திருகோணமலையை சேர்ந்த பலர் எதிர்த்தனர். அந்த நியமனத்தை ஏற்க முடியாது என்றும், பொதுக்குழுவை எதற்காக கூட்டினீர்கள் என கேள்வியெழுப்பினர்.

இந்த நியமனங்கள் வாசித்து முடிக்கப்பட்டதும், பலர் ஆத்திரமடைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நியமனங்களை பொதுக்குழு ஏற்கவில்லையென்றும், ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பை நடத்துங்கள் என்றார்கள்.

பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தாமல், மத்தியகுழுவில் பரிந்துரைக்கப்பட்ட குழுவை நியமித்தால், தாம் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கிவிடுவோம் என பலர் எச்சரித்தனர்.

மட்டக்களப்பு பிரமுகர்கள் பலர் மேடையேறி சென்று, தலைவர் மாவையை நேருக்கு நேராக எச்சரித்தனர். “இதுதான் உங்கள் நியமனமெனில், உங்களில் யாருக்காவது முடிந்தால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழ் அரசு கட்சியின் பெயரை சொல்லி அரசியல் செய்து… கட்சியை வளர்த்து பாருங்கள்“ என சவால் விட்டனர்.

இதன்போது, அம்பாறை முன்னாள் எம்.பி கோடீஸ்வரனும் மேடையேறி சென்று எதிர்ப்பு தெரிவித்தார்.

குகதசனின் நியமனத்துக்கு திருகோணமலையை சேர்ந்த பத்திரிகையாளரும், கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான திருமலை நவமும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரும், மற்றொரு உறுப்பினரமான தர்சன் என்பவரும் எழுந்து நின்று குகதாசனின் நியமனத்துக்கு எதிர்ப்ப தெரிவித்துக் கொண்டிருந்த போது, கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட குகதாசன் ஆதரவாளர் ஒருவர் ஓடிவந்து தம்மை தாக்கி விட்டு தப்பியோடியதாக குறிப்பிட்டனர்.

தம்பலகாமம், குளக்கோட்டன் பாடசாலை அதிபரான விஸ்ணுவர்த்தன் என்பவரே தம்மை தாக்கியதாகவும், இன்று காலை அவருக்கு எதிராக இன்று காலையில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் தாக்கப்பட்ட திருமலை நவம் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

திருகோணமலை பிரதேசசபையொன்றின் தலைவராக பதவிவகித்த ஒருவரும், சம்பந்தன் ஆதரவாளர்களை தாக்குவதை போல மிரட்டியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படும் என புதிய தலைவர் சி.சிறிதரன் மேடையில் அறிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
2
+1
0

இதையும் படியுங்கள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Pagetamil

‘தமிழ் அரசு கட்சியை உடைக்க சதி’: சீ.வீ.கே.சிவஞானம் பரபரப்பு!

Pagetamil

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மிகப்பெரிய கொள்கை மாற்றம்: உள்ளூராட்சி தேர்தலில் சில தரப்புக்களுடன் கூட்டணி!

Pagetamil

உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் பயணிகள் கடத்தல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

நாடளாவிய ரீதியில் இன்று வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!