தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவராக ரட்ணஜீவன் கூலை நியமிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக, அந்த கட்சியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
இன்று (24) தமிழ்பக்கத்திற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசு கட்சி வட்டக்கச்சி கட்சியாக மாறிவிட்டது, தமது கட்சி உலகளாவிய கட்சியெனவும், கட்சிக்கு புது இரத்தம் பாய்ச்சும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.
விரைவில் தேசிய மாநாடு நடத்தப்பட்டு, புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.
ரட்ணஜீவன் கூல் கடந்த ஆட்சியில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினராக பதவிவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




