சாவச்சேரியில் சிறை மீண்ட மகிழ்ச்சியில் ஹெரோயின் பார்ட்டி: பிணையில் விடுதலையான மறுநாள் இளைஞன் பலி!

Date:

சாவகச்சேரி பிரதேசத்தில் அளவுக்கு அதிகமாக ஹெரோயின் உட்கொண்டதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (20) இந்த சம்பவம் நடந்தது.

நுணாவிலை சேர்ந்த 29 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்தார்.

இந்த இளைஞன் போதைக்கு அடிமையானவர். போதைப்பொருள் தொடர்பான குற்றமொன்றிற்காக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர், நேற்று முன்தினம் (19) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரது மனைவியே பிணைக் கையெழுத்திட்டுள்ளார்.

நேற்று நண்பர்களுடன் ஹெரோயின் போதைப்பொருள் உட்கொண்ட போது, அளவுக்கதிகமாக போதைப்பெருளை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளார்.

சில மாதங்களாக போதைப்பொருளை பாவிக்காமல் இருந்தவர், திடீரென முன்னர் பாவித்தளவில் போதைப்பொருளை பாவிக்கும் போது உயிராபத்து ஏற்படுமென மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உயிரிழந்த இளைஞன் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றிக் கொண்டதாக கூறப்பட்ட போதும், அவர் எந்த வழியால் போதைப்பொருளை உபயோகித்தார் என்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்படவில்லை.

உயிரிழந்த இளைஞனின் சடலம் நேற்று இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்ட போது, அவரது நண்பர்கள் அங்கு குவிந்து, சடலத்தை உடனடியாக ஒப்படைக்குமாறு குறிப்பிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டனர். பின்னர், பொலிசார் அவர்களை விரட்டியடித்தனர்.

 

spot_imgspot_img

More like this
Related

முதல் முறையாக நாடொன்றின் மீது இனப்படுகொலை நடத்தியதாக தீர்ப்பு: சர்வதேச நீதிமன்றம் வழங்கியது!

மியான்மர் தனது ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை செய்துள்ளது என்று சர்வதேச...

நீதிமன்றில் சாட்சியமளிக்க சென்ற செயற்பாட்டாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கொன்றில் சாட்சியமளிக்க சென்ற அரசியல் செயற்பாட்டாளரும்,...

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்