பண மோசடியில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஆறு பேர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 மாணிக்கக் கற்களை வாங்கி விட்டு அதற்கு செலுத்த வேண்டிய 2 கோடி 87 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணத்தை சேமிப்பில் காணப்படாத வங்கி காசோலையை வழங்கி முறைகேடு செய்தமை, நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பாக பொலிஸாரிடம் பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடு செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கொழும்பில் வெள்ளிக்கிழமை (19) கோட்டை பொலிஸ் பிரிவில் ஒருவரை கைது செய்தனர்.
இதனுடன் தொடர்புடைய ஏனைய இருவர் பேருவளை மற்றும் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 24, 30 மற்றும் 36 வயதுடையவர்கள்.
இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 25, 43 மற்றும் 53 வயதுடையவர்கள்.




