26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

பொலிஸ்காரர் துப்பாக்கிச்சூட்டில் சாரதி பலி

உத்தரவை மீறி ஓட்டிச் சென்றதாகக் கூறப்படும் லொறியை பொலிஸார் நிறுத்த முயன்றபோது, பொலிஸ் அதிகாரியொருவரின்  கையில் இருந்த துப்பாக்கியால் சுடப்பட்டு, லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாரம்மல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உத்தரவை மீறி இயக்கப்பட்ட லொறியின் பின்னால் விரட்டிச் சென்றபேதுது, ​​லொறி சாரதியை பயமுறுத்துவதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தினால் கோபமடைந்த பொதுமக்கள் குழுவினால் பொலிஸாரின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கோபமடைந்த உள்ளூர்வாசிகள் நாரம்மல பொலிஸாரை சுற்றி வளைத்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக மூத்த அதிகாரி தெரிவித்தார்.

சிவில் உடையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாரம்மல பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது லொறி ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

உத்தரவிட்டும் லொறியின் சாரதி லொறியை நிறுத்தாத சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் லொறியை துரத்திச் சென்று லொறியை நிறுத்தியுள்ளனர். இதன்போதே துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந்தது.

அப்போது அங்கு கூடியிருந்த அப்பகுதி மக்கள் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டதுடன் நாரம்மல போலீசாரை சுற்றி வளைத்து கதவுகளை உடைத்து சொத்துகளை சேதப்படுத்தினர்.

நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்த வேண்டியுள்ளதாக உயர் அதிகாரி தெரிவித்தார்.

வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அரச வேலைவாய்ப்புகள் என்ற போர்வையில் தகவல் திருட்டு

east tamil

இன்று முதல் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு

east tamil

இலங்கையில் விரைவில் சூரிய மின்னுற்பத்தி

east tamil

கம்மன்பிலவின் கவலைகளின் பின்னணி என்ன?

Pagetamil

மத்தள விமான நிலையத்தால் தொடரும் நட்டம்

east tamil

Leave a Comment