கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான நகை திருட்டில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ள முழங்காவில் பொலிசார், திருடப்பட்ட நகைகளையும் மீட்டுள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி முழங்காவில் குமுழமுனை பகுதியில் உள்ள வீட்டில் ஆட்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் தாலிக்கொடி திருடப்பட்டிருந்தது. இது தொடர்பில், வீட்டு உரிமையாளர் முழங்காவில் பொலிசில் முறைப்பாடு செய்திருந்தார்.
விசாரணைகளை மேற்கொண்ட முழங்காவில் பதில் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழு முழங்காவில் பகுதியில் சந்தேக நபர்களை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து, யாழ்ப்பாணத்திலுள்ள நகை விற்பனை நிலையம் ஒன்றில் திருடப்பட்ட தாலிக்கொடியை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து, திருடப்பட்ட நகையையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
நகையை விற்று தொலைக்காட்சி, டிஸ் அன்ரன உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர். இவற்றை பொருத்தி, தென்னிந்திய சீரியல் ஒன்றையும் சந்தேகநபர்கள் பார்த்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும், நகையையும் பொலிசார் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.




