இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் இரத்து!

Date:

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழு கூட்டம் நாளை மறுநாள் (21) திருகோணமலையில் நடைபெறும். காலை 10 மணிக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி, புதிய தலைவரை தெரிவு செய்வார்கள்.

இதற்கு முன்னதாக, 20ஆம் திகதி மாலை கட்சியின் மத்தியகுழு கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் தற்போதைய மத்தியகுழுவின் கடைசிக் கூட்டம் இது.

எனினும், கட்சியின் பதில் பொதுச்செயலாளரிடமிருந்து, மத்தியகுழு கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதில் பொதுச்செயலாளர் பா.சத்தியலிங்கம் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், அவரல் மத்தியகுழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாததால், கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி 21ஆம் திகதி பொதுக்குழு கூடி, தலைவர் தெரிவு நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. இதற்காக 5 அல்லது 8 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படும். அவர்கள் முன்னிலையில் தலைவர் தெரிவு நடைபெறும்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்