26.3 C
Jaffna
January 26, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

இலங்கை தமிழ் அரசு கட்சி தலைமை பதவி போட்டியை தவிர்க்கலாமா?: 3 வேட்பாளர்களும் பேசி தீர்மானிக்க ஒரு நாள் அவகாசம்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரை போட்டியின்றி தெரிவு செய்வதற்காக, 3 வேட்பாளர்களும் தமக்குள் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுக்க ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதியும், தேசிய மாநாட்டை 28ஆம் திகதியும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு இன்று (10) கொழும்பில் இரா.சம்பந்தனின் பங்களாவில் கூடி இந்த தீர்மானத்தை எடுத்தது. திருகோணமலை மாவட்டத்தில் கட்சியின் நிர்வாக தெரிவுகளில் நடந்த குளறுபடிகளை சீர்செய்யாமல் தேசிய மாநாட்டை நடத்தக் கூடாது என இரா.சம்பந்தன் வலியுறுத்திய போதும், கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் மாநாட்டை நடத்தியே தீர வேண்டுமென வலியுறுத்தியதால், பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையில், மாநாட்டை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இன்று மாலை 3 மணிக்கு கூட்டம் ஆரம்பத்தது.

இன்றைய கூட்டத்தின் நோக்கம் குறித்து மாவை சேனாதிராசா விளக்கமளித்தார்.

இதை தொடர்ந்து, சட்டத்தரணி கே.வி.தவராசா கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சிறிய துண்டுப்ப்ரசுரமொன்றை வழங்கினார். அதில் 1951 முதல் 2019 வரையான தேசிய மாநாட்டு விபரங்கள், அதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் இருந்தது. கிரமமான கால ஒழுங்கில் தேசிய மாநாடுகள் நடந்து போட்டியின்றி தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டதை அதில் குறிப்பிட்டிருந்தார்.

சிறிதரன்- சுமந்திரன் ஆகிய இருவருமே தலைமை போட்டியில் யார் வென்றாலும், இணைந்து செயற்படுவதாக கூறியுள்ளனர். ஆனால், கீழ் மட்டத்தில் அவ்வாறு நிலைமையில்லை. இரண்டு தரப்பு ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் மோதிக் கொண்டிருக்கிறார்கள். யார் வென்றாலும், கட்சிக்கு பாதிப்பு உள்ளது என குறிப்பிட்டார்.

இதனால், மூன்று வேட்பாளர்களும் தமக்குள் பேசி ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், ஒவ்வொருவருக்கும் தலா 2 வருடங்கள் என பேசித்தீர்க்கலாம் என பிரேரித்தார்.

சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பியும் இதனை ஆமோதித்தார். தலைமை போட்டியால் வட்டார கிளைகளிற்குள் குழப்பம் நிலவுவதாக தெரிவித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பான்மையானவர்கள் இதே கருத்தையே தெரிவித்தனர்.

இதையடுத்து, தலைமை பதவி போட்டியில் விட்டுக்கொடுப்புக்கள் மேற்கொள்ளலாமா என 3 வேட்பாளர்களும் கலந்துரையாடி பதிலளிப்பதாக 3 வேட்பாளர்கள் தரப்பிலும் கூறப்பட்டது. இதற்காக ஒரு நாள் அவகாசத்தை அவர்கள் கோரினார். நாளை கொழும்பில் 3 பேரும் கலந்துரையாடி தமது முடிவை அறிவிப்பார்கள்.

இதை தொடர்ந்து கட்சியின் தேசிய மாநாட்டு விபரம் பேசப்பட்டது. திருகோணமலை கிளைகளை மீள் தெரிவு செய்யாமல் தேசிய மாநாட்டை நடத்தக் கூடாது என சம்பந்தன் கூறினார். ஒன்றரை வருடங்களின் முன்னர் நடந்த விவகாரத்தை இப்பொழுது பேசுகிறீர்கள், இதற்காக மாநாட்டை தள்ளிவைக்க கூடாது என சுமந்திரன் தெரிவித்தார்.

மாநாட்டை தள்ளிவைத்தால் கட்சியின் உறுப்புரிமைக்கு சிக்கல் ஏற்படும் என்பது போன்ற காரணங்களை பலரும் முன்வைத்தனர். சம்பந்தரின் கவலைகளை தீர்க்க, அவர் சிபாரிசு செய்யும் 6 பேரை திருகோணமலை சார்பில் பொதுக்குழுவில் கலந்து கொள்ள அனுமதிக்கலாமென மாற்று யோசனை சொல்லப்பட்டது. பெரும்பாலானவர்கள் இதை ஆதரித்ததால், திட்டமிட்டபடி தேசிய மாநாட்டை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

Leave a Comment