நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்த வேளையில் காரில் வந்த சந்தேகநபர் ஒருவர் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் சிவில் விமான சேவையின் பெண் உத்தியேகத்தர் ஒருவரின் கழுத்தை வெட்டிவிட்டு தப்பிச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
பிலியந்தலை, மடபட, ஜபுரலிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட துலங்கலி அனுருத்திகா என்ற 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் வைத்தியர் ஒருவரின் மனைவி.
சிவில் விமான சேவை அதிகார சபையில் பணியை முடித்துக் கொண்டு அலுவலக சேவை பேருந்தில் மென்ஹோ ரண கொழும்பு வீதிக்கு வந்து, ஹொரணை கொழும்பு வீதிக்கு வந்து கொண்டிருந்த போது காரில் வந்த நபர் ஒருவரால் வாள்வெட்டு மற்றும் கழுத்தில் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
கஹதுடுவ அதிவேக வீதி நுழைவாயிலில் இருந்து மென்ஹோ ரண கொழும்பு வீதிக்கு பஸ்ஸில் வந்த போது காரில் வந்த நபர் ஒருவர் அவரது கழுத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
கொலையாளியின் காரின் பதிவு எண் அனுராதபுரத்தைச் சேர்ந்தது என விசாரணையில் கண்டறியப்பட்டது.
திருமணத்திற்குப் புறம்பான உறவே இந்தக் கொலைக்குக் காரணம் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் விசா ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல வர்த்தக நிலைய கட்டிடம் ஒன்றில் இவரது அலுவலகம் அமைந்துள்ளது.
குற்றம் நடந்த இடத்தில் வீதி முழுவதும் இரத்தம் பரவியிருந்தது.
கொலையாளி நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட சமயத்தில் இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.