அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணையவுள்ளனரா என்பதை அறிய அரச புலனாய்வு அதிகாரிகள் இந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர்களை பின்தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுஜன பெரமுனவை சேர்ந்த அமைச்சர்கள் குழுவொன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், இது தொடர்பில் ஆராய பெரமுன பிரமுகர்களையும், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரமுகர்களையும் புலனாய்வு அதிகாரிகள் பின்தொடர்வதாக கூறப்படுகிறது.
பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகள் பலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்ள இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையும் இவ்வாறான அரசியல்வாதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவருக்கு நெருக்கமான சில பிரமுகர்களுடன் மாத்திரம் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வதால், புலனாய்வு பிரிவினர் நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.