பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் தடம் புரண்டதையடுத்து தடைப்பட்டிருந்த மலையக புகையிரத பாதை சுமார் பத்து மணித்தியாலங்களின் பின்னர் மீளமைக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் நானுஓயா மற்றும் கிரேட்வெஸ்டன் ஆகிய இரண்டு நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டதால் மலையக ரயில் போக்குவரத்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் முற்றாக முடங்கியது.
கொழும்பில் இருந்து பதுளைக்கு உடரட மெனிகே ரயிலில் இருந்து வந்த பெருமளவான பயணிகள் நாவலப்பிட்டியிலிருந்து தியத்தலாவைக்கு பஸ்கள் மூலம் செல்வதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது.
இன்று (06) அதிகாலை முதல் அனைத்து புகையிரதங்களும் வழமை போன்று இயங்கும் எனவும் விடுமுறை காலம் மற்றும் சிறிபாத சீசன் காரணமாக இந்த நாட்களில் புகையிரதத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் குறிப்பிட்டுள்ளது.