ஹிக்கடுவைக்கு மேற்கே 28 கடல் மைல் (50 கிமீ) தொலைவில், போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற உள்ளூர் பல நாள் மீன்பிடி இழுவை படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.
நேற்று (5) இந்த படகு காலி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்த படகிலிருந்து 245 கிலோகிராம் (பொதிகள் உட்பட) கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன. அவற்றின் பெறுமதி சுமார் 3,190 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
130 பொட்டலங்களில் சுமார் 189 கிலோ 388 கிராம் (பொதிகள் உட்பட) ஐஸ் மற்றும் 48 பொதிகளில் சுமார் 55 கிலோ மற்றும் 648 கிராம் (பொதிகள் உட்பட) ஹெரோயின் எட்டு சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்தன. மீன்பிடி படகில் இருந்த இலங்கை பிரஜைகள் 6 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1