டெங்கு நோயைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பான பொதுமக்களின் அழைப்புகளுக்காக அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு பிரிவினால் நிறுவப்பட்ட 011-7 966 366 என்ற தொலைபேசி இலக்கமானது சனி – ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை டெங்கு மற்றும் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் பற்றிய தகவல்களைப் பெற முடியும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1