Pagetamil
மலையகம்

மலையக மார்க்க புகையிரத சேவைகள் சீராகின!

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் தடம் புரண்டதையடுத்து தடைப்பட்டிருந்த மலையக புகையிரத பாதை சுமார் பத்து மணித்தியாலங்களின் பின்னர் மீளமைக்கப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் நானுஓயா மற்றும் கிரேட்வெஸ்டன் ஆகிய இரண்டு நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டதால் மலையக ரயில் போக்குவரத்து நேற்று பிற்பகல் 3 மணியளவில் முற்றாக முடங்கியது.

கொழும்பில் இருந்து பதுளைக்கு உடரட மெனிகே ரயிலில் இருந்து வந்த பெருமளவான பயணிகள் நாவலப்பிட்டியிலிருந்து தியத்தலாவைக்கு  பஸ்கள் மூலம் செல்வதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது.

இன்று (06) அதிகாலை முதல் அனைத்து புகையிரதங்களும் வழமை போன்று இயங்கும் எனவும் விடுமுறை காலம் மற்றும் சிறிபாத சீசன் காரணமாக இந்த நாட்களில் புகையிரதத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொட்டகலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் – கார் மோதி விபத்து

east tamil

16 வயது மாணவி மாயம்

Pagetamil

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைது

east tamil

கண்டி வத்தேகம படுகொலை: ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

east tamil

ஹட்டனில் திடீர் சுற்றிவளைப்பு: 130 பேர் மீது வழக்கு பதிவு

east tamil

Leave a Comment