யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் கில்மிஷாவை வரவேற்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.
தமிழ் கலாசார பாராம்பரிய நடனங்கள் ஆடப்பட்டு, முத்து சப்பரத்தில் கில்மிஷாவை ஏற்றி ஊர் மக்கள் தூக்கி சென்றனர்.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திறந்த காரில் புறப்பட்ட கில்மிஷாவுக்கு வீதியெங்கும் மக்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.
அரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலைய முன்றலில் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.சாரங்கா இசைக்குழுவினரின் இசையில் கில்மிஷா சில பாடல்களையும் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தொலைக்காட்சி சீ தமிழ் நடாத்திய சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட கில்மிசா வெற்றியாளராக தெரிவாகியிருந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1