வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் வெளிநாட்டிலிருந்து அடித்து வரப்பட்ட மிதக்கும் அமைப்பொன்று கரையொதுங்கியுள்ளது.
மத வழிபாட்டு அமைப்பொன்றே கரையொதுங்கியுள்ளது.
தென்கிழக்காசிய நாடொன்றிலிருந்து இந்த மிதக்கும் அமைப்பு அடித்து வரப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
அந்த அமைப்பை பார்க்கும் போது, தாய்லாந்தின் பௌத்த வழிபாட்டு அமைப்பை போலிருப்பதாகவும், கௌதம புத்தரின் வழிபாட்டு அமைப்பு கரையொதுங்கிய சம்பவமென அங்கு விகாரை கட்டும் முஸ்தீபு ஆரம்பிக்கலாமென்றும் பிரதேசவாசிகள் நகைச்சுவையாக பேசிக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1