யாழில் டெங்கு தொற்றினால் இளைஞன் உயிரிழப்பு!

Date:

டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் சாருயன் (23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்

டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், மூளை சாவடைந்திருந்தார்.

அந்நிலையில் தொடர்ந்து இளைஞனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார்

அதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மாத்திரம் 71 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு காரணமாக இரண்டு விடுதிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளதுடன், குழந்தை நோயாளர் விடுதி நிரம்பி உள்ளது என வைத்தியசாலை பணிப்பளார் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை 11 மாத குழந்தை ஒன்று டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்து இருந்ததுடன் , கடந்த சனிக்கிழமை டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமை ஏற்பட்டமையால், மாணவி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பிரித்தானிய பொலிசாரால் தேடப்படும் யாழ் இளைஞன்!

பிரித்தானியாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரை பொலிசார்...

கொடூர குற்றவாளி பஸ் லலித் நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார்!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், டுபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த...

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்