சாவகச்சேரி பொலிசாரால் கஞ்சா வியாபாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனங்கிளப்பு பகுதியில் இன்று (27) மாலை இவர் கைது செய்யப்பட்டார். ஒரு கிலோகிராம் கேரளா கஞ்சாவும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவை எடுத்துச் சென்ற போது கையும் மெய்யுமாக சிக்கியுள்ளார்.
தனங்கிளப்பு பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1