இன்றைய வானிலை

Date:

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்-

♦ யாழ்ப்பாணம் – அவ்வப்போது மழை பெய்யும்.
♦ திருகோணமலை – அவ்வப்போது மழை பெய்யும்.
♦ மன்னார் – அடிக்கடி மழை பெய்யும்.
♦ மட்டக்களப்பு- அவ்வப்போது மழை பெய்யும்.
♦ கண்டி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
♦ நுவரெலியா – அடிக்கடி மழை பெய்யும்.
♦ இரத்தினபுரி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும்.
♦ அனுராதபுரம் – அடிக்கடி மழை பெய்யும்.
♦ கொழும்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.
♦ காலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்.

 

 

 

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்