யாழிலிருந்து ‘பறந்து சென்ற’ பேருந்து மோதி மாடுகள் பலி!

Date:

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்துவழி பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் அதி வேகமாக பயணித்த தனியார் பேருந்தே நாயாத்து வழி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த மாடுகளின் மீது மோதியுள்ளது.

குறித்த விபத்தில் கூட்டமாக சென்ற மாடுகளில் 8 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு பல மாடுகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளன.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாளம்பன் கிராமத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களின் மாடுகள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் மாடுகளை அடைக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

பயணிகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து அதி வேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மாடுகளின் மீது மோதி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேருந்து சாரதியின் கவனயீனமே குறித்த விபத்திற்கு காரணம் எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பலே திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார்

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டு...

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்