வண்ணாத்திவில்லு எழுவன்குளம் பகுதியில் நபர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கி பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையடித்த குழுவொன்றின் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
எழுவன்குளம் – ரால்மடுவ பிரதேசத்தை சேர்ந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் மூவரை கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனமும் இதுவரை கைப்பற்றப்படவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1