வேலைக்கு செல்லாமல் சுகபோகமாக வாழ்ந்த இளம் ஜோடி கைது: இப்படியொரு மோசமான வேலை செய்தார்களா?

Date:

பாலியல் ரீதியிலான செயற்பாடுகளை வீடியோ எடுத்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த இளம் தம்பதியொருவர் ராகம பிரதேசத்தில் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த தம்பதிகள் தொடர்பில் ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 வயதுடைய இளம் பெண்ணும் அவரது 24 வயது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ராகம, தம்புவ பிரதேசத்தை வசிப்பிடமாகவும், சந்தேகநபர் கொழும்பு IDH பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் இராணுவத்தில் கடமையாற்றியவர்களில் ஒருவர் எனவும் தற்போது இராணுவத்தில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முறையான வருமானம் இல்லாததால் மனைவியின் தாய் வீட்டுக்குச் சென்று காட்சிகளைப் பதிவு செய்து பிரபல இணையத்தளம் ஒன்றில் பதிவேற்றியதாக கணவர் தெரிவித்துள்ளார்.

இந்த தம்பதியினர் வேலை செய்யாமல் சுகபோகமாக வாழ்வதால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், அவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன்படி இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தங்கியிருந்த வீட்டில் மடிக்கணினி, காணொளிக் கமெரா மற்றும் இதற்குப் பயன்படுத்தப்பட்ட சில சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல்...

மாளிகைக்காடு மையவாடி விவகாரம்: பள்ளிவாசல் தலைமைகள், பொது அமைப்பினர் மற்றும் ஊர் பிரமுகர்களுடன் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கலந்துரையாடல்

மாளிகைக்காடு மையவாடி தொடர்பில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்