யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் யுவதியான அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்து 19 வயதுக்கு உள்பட்டோருக்கான பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார்.
நேற்று முன்தினம் (22) அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் அமுருதாவும் இடம்பிடித்துள்ளார்.
இவரின் தகப்பனார் சென் ஜோன்ஸின் முன்னாள் கிரிக்கட் வீரர் ஆவார். யாழ்ப்பாண பிக் மட்ச் இல் போட்டியொன்றில் அதிக ஓட்டம் பெற்ற (145) சாதனையும் அவர் வசமே உள்ளது.
2024 மார்ச்சில் இடம்பெறவுள்ள இலங்கைக்கான இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணத்தில் அமுருதாவும் இடம்பெற்றுள்ளார்.