சட்டவிரோதமாக வைத்திருந்த ரிவோல்வர், 15 தோட்டாக்கள், ஒரு ரம்போ கத்தியுடன் இங்கிலாந்து செல்லவிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் டிசம்பர் 22ஆம் திகதி பிற்பகல் கைது செய்தனர்.
இவ்வாறான துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை விமானம் வழியாக எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்ட செயற்பாடாகும். அவ்வாறான துப்பாக்கிகளை எடுத்துச் செல்வது அவசியமானால் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சட்டப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும்.
இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்படுவதற்காக டிசம்பர் 22 ஆம் திகதி மதியம் 12.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 54 வயதான பார்க்கர் ரொபர்ட் மைக்கேல் என்ற பிரித்தானிய பிரஜை கைது செய்யப்பட்டவர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1