இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

Date:

இலங்கையில் இவ்வருடம் இடம்பெற்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் பொலிஸ் காவலில் இருந்த போது சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை, காவலில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட மரணங்கள் தொடர்பாக இவ்வருடம் 200க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு இது தொடர்பான தகவல்களைத் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

வருடத்தின் முதல் 6 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட சித்திரவதை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்துள்ளது.

காவலில் இருந்த போது ஏற்பட்ட 06 மரணங்கள் மற்றும் தடுப்புக் காவலில் இருந்த 02 மரணங்கள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சர்வதேச மனித உரிமைகள் தினத்துடன் இணைந்து, சந்தேகநபர் பொலிஸ் காவலில் இருக்கும் போது, மரணம், ​​சித்திரவதை மற்றும் ஏனைய பிரச்சினைகளைத் தடுப்பதற்கான வரைவு வழிகாட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையையும் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை பொலிஸாருக்கு வழங்கியது.

மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள தொடர்புடைய வழிகாட்டல் அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தையும் கோரியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு- யாழ் இரயிலில் அதிகவிலையில் குடிநீர் போத்தல் விற்பனை

குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிக விலையில் போத்தல் குடிநீர் விற்கப்படுவதைக்...

போலிப்படத்தை பரப்பாதீர்கள்

அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA), தங்களைக் குறிவைத்து சமூக ஊடகங்கள்...

நவாலி தேவாலய படுகொலை நினைவு

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்