26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
மலையகம்

3 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த விஞ்ஞான ஆசிரியர் கைது!

நுவரெலியா மாவட்டத்தில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 3 மாணவிகளை பாடசாலையின் ஆய்வு கூடத்தில் வைத்து துஷ்பிரயோகம் செய்த அதே கல்லூரியின் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கித்துல்லே, பல்லேதோவ பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய திருமணமான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் 9 ஆம் வகுப்புக்கு பொறுப்பான ஆசிரியர் எனவும், அவர் விஞ்ஞான பாடத்தை கற்பிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்குரிய ஆசிரியரின் மனைவியும் ஆசிரியை என்பது தெரியவந்துள்ளது.

குறித்த ஆசிரியர் மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதுடன், அந்த மாணவியின் ஊடாக ஏனைய இரு மாணவிகளும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாணவி ஒருவரிடம் வாட்ஸ்அப் மூலம் நிர்வாண புகைப்படங்களை கேட்டு வற்புறுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆசிரியரின் கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் வலப்பனை நீதவான் நீதிமன்றில் இன்று (21) ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், பாடசாலை மாணவிகள் மூவரும் சட்ட வைத்திய பரிசோதனைக்காக ரிகில்கஸ்கடபொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டன் கொட்டகல வைத்திய சாலையில் இறந்தவரை இனங்காண பொலிஸ் உதவி கோரல்

east tamil

கண்டி ஹோட்டலில் குரங்குகளின் குறும்பு: வேடிக்கையில் மக்கள்

east tamil

மண்சரிவு அபாயம் – நுவரெலியாவில் 36 பேர் வெளியேற்றம்

east tamil

காதல் தகராறு முற்றி விபரீதம்… நீண்டநாள் காதலியின் உயிரைக்குடித்த கலாபக்காதலன்!

Pagetamil

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

Leave a Comment