நிர்வாகத்தின் செலவைக் குறைப்பதற்காக முன்னர் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப எந்தவொரு இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கும் 2023 ஆம் ஆண்டிற்கான எந்தவொரு போனஸ் கொடுப்பனவுகள் அல்லது முந்திய வருடத்திற்கான செலுத்தப்படாத வருடாந்திர போனஸ் மற்றும் பிற ஊக்கத்தொகைகள் எவையும் வழங்கப்படக்கூடாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின்சார சபை உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
மின்சார சபை ஊழியர்களுக்கு முன்னர் செலுத்தப்பட்ட ஊக்கத்தொகைகள் மற்றும் கொடுப்பனவுகளும் இதில் அடங்கும். 2015 முதல் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் வழங்கப்படும் 25% சம்பள உயர்வையும் தொடரக்கூடாது.
மேலும் மின்சார சபைஅதிகாரிகளுக்கு வழங்கப்படும் 21 பல்வேறு கொடுப்பனவுகள் மற்றும் ஊக்கத்தொகைகள் குறித்து தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2023 இல் செலுத்தப்பட்ட தொகைகள், அவை எவ்வாறு செலுத்தப்படுகின்றன, ஒவ்வொரு மின்சார சபை அதிகாரிக்கும் ஒதுக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் வாடகையாக செலுத்தப்பட்ட தொகைகள் குறித்து அறிக்கையளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.