எண்ணெய் மசாஜ் செய்யச் சென்ற செவித்திறன் குறைபாடுள்ள இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பூசாரிக்கு 20 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.தர்ஷிகா விமலசிறி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மேலும் புகார்தாரருக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அந்த தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.



