மன்னாரில் 14 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்த அதிபர்!

Date:

மன்னார் கரிசல் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் கல்வி கற்கும் பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (17) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது

பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்யும் நிகழ்வு என அறிவித்து குறித்த மாணவனை அழைத்து அதிபர் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிய வருகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மாணவன் பெற்றோருக்கு அறிவித்த நிலையில் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை பாடசாலை சென்ற நிலையில் அதிபர் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளார். மறுநாள் திங்கட்கிழமை (18) பெற்றோர் பாடசாலை சென்ற நிலையில் அதிபர் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை .

இந்த நிலையில் அப்பகுதியில் இயங்கும் பள்ளி நிர்வாகத்தினர் பாடசாலை அதிபர் மற்றும் மாணவனை அழைத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இருப்பினும் குறித்த மாணவனின் குடும்பத்தினர் எருக்கலம் பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற நிலையில் அங்கு சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு இல்லை என அறிவிக்கப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் அதிபரால் குறித்த துஷ்பிரயோகம் இடம் பெற்ற போதிலும் அதிபர் சார்பாக சிலரின் அழுத்தம் மற்றும் சில நிர்வாகத்தினரின் அழுத்தம் காரணமாக குறித்த விடயம் மன்னார் பொலிஸாருக்கு தெரியப்படுத்த படவில்லை என தெரிய வந்துள்ளது.

இருப்பினும் குறித்த விடயத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மாணவனை சட்டவைத்திய அதிகாரி முன்னிலைப்படுத்தி பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நீதியை பெற்று கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தில்ஷான் மதுஷங்கவை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

காயம் காரணமாக விலகிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ்...

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்