உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட்டின் புதிதாக நியமிக்கப்பட்ட தேர்வுக் குழு, இலங்கை டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி20 அணிகளுக்கான தலைமை பொறுப்பில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அறிக்கைகளின்படி, தனஞ்சய டி சில்வா டெஸ்ட் கப்டனாக நியமிக்கப்படுவார். குசல் மெண்டிஸ் துணை கப்டன் பதவியை ஏற்கிறார்.
ஒருநாள் அணிக்கு குசல் மெண்டிஸ் கப்டனாகவும், சரித் அசலங்க துணை கப்டனாகவும் செயல்பட உள்ளனர். ரி20 வடிவத்தில், வனிந்து ஹசரங்க கப்டனாகவும், சரித் அசலங்க துணை கப்டனாகவும் நியமிக்கப்பட உள்ளனர்.
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள இலங்கை-சிம்பாப்வே போட்டிக்கான இலங்கை அணி தொடர்பான இறுதி முடிவுகள் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள தெரிவுக்குழுவின் அடுத்த கூட்டத்தில் ஆராயப்படும்.
இந்த முக்கியமான சந்திப்பின் போது அந்தந்த வடிவங்களுக்கான கப்டன் பொறுப்புகள் குறித்தும் குழு உறுதியான முடிவை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



