ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2 ஆவது மாநாட்டில் மஹிந்த ராஜபக்சவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே முன்மொழிந்ததோடு, அதனை ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வழிமொழிந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட தேசிய மாநாடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
அக்கட்சியின் சுமார் 5000 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1