கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவில் சுண்ணக்கல் அகழ்வு பணிகளை முன்னெடுக்கும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்ள சென்ற டோக்கியோ சிமெந்து நிறுவனத்தினர், கனியவள திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட ஏனைய திணைக்கள அதிகாரிகளையும் பணிகளை மேற்கொள்ள விடாது தடுத்த பிரதேச மக்கள்
அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளவுள்ள சுண்ணக்கல் அகழ்வு பணிகள் காரணமாக தங்களது கிராமங்கே இல்லாது போய்விடும் எனத் தெரிவித்து பிரதேச பொது மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றார்கள்.
இந்த நிலையில் இன்றைய தினம் சுண்ணக்கல் அகழ்வு பணிகளை மேற்கொள்ளும் வகையில் அதற்கான அனுமதியினை வழங்கும் பொருட்டு கனிய வளத்திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்றிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய பொது மக்கள் அவர்களை ஆய்வு செய்யவிடாது திருப்பி அனுப்பியுள்ளனர்.
முன்னைய நல்லாட்சி அரசின் காலத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஆதரவுடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, ஈ.பி.டி.பி இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ளதாக பிரதேச மக்கள் சந்தேககம் வெளியிட்டுள்ளனர். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் விவசாயம், கால்நடை வளர்ப்பில் பிரசிதித்தி பெற்ற பூநகரி உவரடையும் என பல தரப்பினர் அச்சம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.